புதன், 6 ஜனவரி, 2016

பழைய உடன்படிக்கை   Vs புதிய உடன்படிக்கை

💥பழைய உடன்படிக்கை  
Vs புதிய உடன்படிக்கை 💥

பழைய உடன்படிக்கை என்பது  மத்தியஸ்தர்கள் மூலம் தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட வார்த்தைகளை  (கட்டளைகளை நியாயங்களை) நம்முடைய மனித அறிவால் அமர்ந்து  ஆராய்ந்து அதன்படி  நம்மை நாமே  நடத்துவது  அல்லது அதன்படி நடக்க நாம்  பிரயாசம் எடுப்பது  ஆகும்.   

ஆனால் புதியஉடன்படிக்கை என்றால் முற்றிலும் தேவனால் நடத்தப்படும் ஒரு நிலை. இங்கு மனித முயற்ச்சிக்கு இடமே இல்லை. நம்முள் இருக்கும் ஆவியானவர் நம்மை நடத்துவார். அவ்வாறு நடத்தபடுபவர்களுக்குதான் ஆக்கினைதீர்ப்பு இல்லை. மற்றவர்கள் எல்லோருமே பழைய நிலையிலேதான் இருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ரோமர் 8:1ஆனபடியால், கிறிஸ்துஇயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி  நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

இவ்வாறு தேவஆவியில் நடத்தபடுபவர்களுக்கு நியாயபிரமாணத்தின நீதி தானாக நிறைவேறும். ஏனெனில் இங்கு நடத்திசெல்பவர் நியாய பிரமாணத்தை கொடுத்த தேவனே!    

ரோமர் 8:4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

புதிய ஏற்பாட்டு காலத்தில்  ஆவியானவர்  பல பரிசுத்தவாங்களுடன் பேசி கரம்பிடித்து வழி நடத்தினார் என்பதை அனேக வசனங்கள் மூலம் உறுதிபடுத்த முடியும்.  

அப்போஸ்தலர் 13:2   பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

அப்போஸ்தலர் 20:23 பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்

அப்போஸ்தலர் 21:11  பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் .
ரோமர் 8:16  ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

இவ்வாறு தேவனின் ஆவியானவரால்  போதித்து/ கண்டித்து/ பேசி/  தடுத்து வழி நடத்துதலே ஆவியால் நடத்தபபடுதல் ஆகும். இவ்வாறு ஆவியை பெற்று நடக்காதவர்கள் ஆவியில் நடத்தப்படவில்லை என்பதை அறிய வேண்டும்.  

இப்பொழுது பழைய புதிய உடன்படிக்கைக்கு இடையே  உள்ள வேறுபாட்டை ஒரு சிறு  உதாரணம்  மூலம்  பார்க்கலாம். 

நான் என் மகனிடம் சென்னை எழும்பூருக்கு  எவ்வாறு போகவேண்டும் என்று ஒரு காகிதத்தில் எழுதிகொடுத்து "எழுதியிருக்கிறபடி பார்த்து நடந்து  சரியாக போய் சேர்" என்று சொல்வது பழைய ஏற்பாடு.

ஆனால் புதிய ஏற்ப்பாடு என்பது "நானே என் மகனை கரம்பிடித்து போதித்து என்னுடனே  அழைத்து சென்று எழும்பூரில் கொண்டுபோய்  விடுவது." 

இந்நிலையில் நான் முன்பு எழுதிகொடுத்த வழி முறைகள் அவனுக்கு நிச்சயம் தேவையில்லைதான். அவனும்  நான் எழுதிகொடுத்த பழைய வழிகளை கையில் வைத்துகொண்டு, அப்பா அங்கு போககூடாது, இங்கு போககூடாது என்று என்னிடம்\ சொல்லமுடியாது. நான் அவசரத்தினிமித்தம் வேறுவழியாக கூட அவனை அழைத்து செல்லலாம் ஆனால் நிச்சயம் அவனை எழும்பூர் கொண்டு சேர்த்து விடுவேன். எனவே நான் அவனை அழைத்துசொல்லும் அந்நேரத்தின் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்டு நடந்தால் மட்டும் போதுமானது

அதேபோல்  அனைத்தும்  அறிந்த நம் தேவன், ஆவியாய்  நம்முள் வந்துதங்கி, நமக்கு  போதித்து  நம்மை  கரம்பிடித்து அழைத்து செல்லும் நிலைதான் புதிய ஏற்பாட்டு நிலை. அவ்வாறு அவர் ஆவியில் நம்மை வழிநடத்தி செல்லும்போது நாம் எதற்கும் பயப்படாமல், ஒரு சில  பாரம்பரிய கட்டளைகளை மீறினாலும் அவர் இழுத்து செல்லும் வழியில் அவருக்கு கீழ்படிந்து சென்றால்  மட்டுமே போதுமானது.   

💥வசனப்படி கீழ்கண்ட விளக்கத்தை தரமுடியும்: :

எரேமியா 7:23  நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள்உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்குநடவுங்கள்

நீங்கள் நடவுங்கள் என்று நமக்கு கட்டளையிடுவது பழைய ஏற்பாட்டு பிரமாணம்.

யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் 

உங்களை நடத்துவார்  என்று நமக்கு வாக்குகொடுப்பது புதியஏற்ப்பாடுபிரமாணம்  

எனவே நாம் இந்த புதியஏற்பாட்டு காலத்தில் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது நம்முள் சத்திய ஆவியானவர் தங்கி இருக்கிறாரா? என்பதைத்தான். அதை எவ்வாறு அறிந்துகொள்வது? ஆதி அப்போஸ் த்தலர்களை வழி நடத்தியது போல் அனுதினம்  நமக்கு போதித்து/ கடிந்துகொண்டு/ தடுத்து/ ஆட்கொண்டு வழி நடத்துகிறாரா என்பதான் அடிப்படையிலேயே!

"அப்பாவின் வார்த்தைக்கும்" "அடுத்த வீட்டுகாரனின் வார்த்தைக்கும்" உள்ள வேறுபாடு எப்படி நமக்கு நன்றாக  தெரியுமோ, அதுபோல் ஆவியானவரின் குரலை அடிக்கடி  கேட்டு பழகபழக ஆண்டவரின் வார்த்தையை நாம்மால் சுலபமாக அறிய முடியும்.

இவ்வாறு நடத்தப்படும் நிலையில் நாம் தேவனின் எந்தவார்த்தையையும் கைக் கொண்டு நடக்க  தேவையில்லையா?  என்ற கேள்வி எழலாம். அதற்க்கு 'நாம் ஆவியானவரால் எவ்விதத்தில் நடத்தப்படுகிறோம்' என்பதன் அடிப்படையிலேயே பதில் தரமுடியும்.  அதைப்பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.  
-----------------------------------------
அடுத்த பதிவில்.....

*ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்! *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...