புதன், 6 ஜனவரி, 2016

5 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்🌹

💥கர்த்தர் தாவீதுடன் ஏற்படித்திய உடன்படிக்கை(2 Sam. 7:5–19)💥

1.      நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.2.      அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.3.      நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.4.      உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.5.      உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்  என்று சொல்லச்சொன்னார்.

இந்த இராஜ்ஜியம் மட்டுமல்ல , எப்பொழுதும் உனது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சந்த்தியை உனக்கு உண்டாக்குவேன். இது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாகும். தாவீதுடைய கீழ்ப்படிதலினாலோ அல்லது அவருடைய நீதியினாலோ ஏற்படுவதல்ல. இது ஆதாமுடன்செய்து கொண்ட உடன்இடிக்கையின் ஒரு பகுதியாகும்.அதாவது “ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்கும்” என்ற வாக்குறுதியின் பொருட்டு .மேசியா வெளிப்படுவதற்கான ஒரு வழியாகும்.கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.( மத் 1: 1-16)

💥புதிய உடன்படிக்கை (எரே. 31:31–34; எபி. 8:7–12; லூக் 22:20)💥

இஸ்ரவேல் மக்களோடும், யூதா மக்களோடும் புதிய உடண்படிக்கையானது தெளிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Jer 31:31 ) இது எதிர்காலத்திற்குரிய உடன்படிக்கையாகும். இது மோசே யுடன்  செய்த உடன்படிக்கையைப்போல நிபந்தனையுள்ள உடன்படிக்கையல்ல.

இங்கு நானே உங்களைச் சுத்தமாக்குவேன் என்றும் உங்கள் உள்ளத்தில் என் பரிசுத்த ஆவியை வைப்பேன் என்றும் என் கட்டளைகளில் உங்களை நடக்கப் பண்ணுவேன் என்றும் தெளிவாக்க் கூறுகி ன்றார். ( எசேக் 36:-25-27)

நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிரு ப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.( எரே. 31: 33)

நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.( எரே: 31: 34)

இது என்றென்றைக்கும் நீடத்திருக்கும்(எரே.31:35-37)

புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

சபையானது புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டது என்பதை கர்த்தருடைய இராப்போஜனத்தில் யேசு போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத் தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

இங்கு இந்தப் பாத்திரம் என்பது புதிய உடன்படிக்கை பிரதிபலிப்பதாகவும், அவருடைய இரத்தத்தினால் உறுதி செய்யப்படுவதாகவும் காணப்படுகிறது

💥சிந்தனைக்கு💥

எபிரெயர் 10
---------------------
26  சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
27  நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
28  மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே
29  தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.

*தொடர்ந்து வரும் பதிவுகளில்,...

💥பழைய உடன்படிக்கை  Vs புதிய உடன்படிக்கை 

மற்றும்....

💥புதிய உடன்படிக்கையின் மேன்மை

பற்றி விரிவாக பார்ப்போம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...