செவ்வாய், 5 ஜனவரி, 2016

4 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்🌹

💥மோசேயுடன் செய்த உடன்படிக்கை. (Ex. 19:5; 20:1–31:18).

இந்த உடன்படிக்கை மிகவும் விசாலமானது. இதற்குள் 10 கற்பனைகளும் அடங்குகின்றன.கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும், அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் விளக்கிக் கூறப்படுகின்றன. (Ex. 20:1–26); சமூகவாழ்க்கைக்கான அனேக சட்டதிட்டங்கள்கொடுக்கப்பட்டுள்ள்ன. (Ex. 21:1–24:11); சமயவாழ்விற்கான விபரமான சட்டங்கள் இதில் அடங்குகின்றன. (Ex. 24:12–31:18).இவைகள் அனைத்தும் இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுக்கப்பட்டதேயன்றி புறஜாதிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நிபந் தனையுடனான உடன்படிக்கையாகும், மனிதர்களின் கீழ்படில் அவசியமானதாகும், அதனால் இது மாமிசத்தில் பலவீனமானது (றொ. 8: 3)புதிய ஏற்பாட்டில் ( ஓய்வுநாளைத்தவிர )ஒன்பது கட்டளைகளும் திருப்பிக்கூறப்பட்டுள்ளன.

💥கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளும்அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்
1.“ என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ” (Ex. 20:3). 6. “கொலை செய்யாதிருப்பாயாக. ” (Ex. 20:13).
2. “சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; ” (Ex. 20:4). 7. “You shall not commit adultery” (Ex. 20:14).விபசாரம் செய்யாதிருப்பாயாக.
3. “தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;. ” (Ex. 20:7). 8. “You shall not steal” (Ex. 20:15). களவு செய்யாதிருப்பாயாக.
4 “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;” (Ex. 20:8). 9. “You shall not bear false witness against your neighbor” (Ex. 20:16).பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
5“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்தகப்பனையும் உன் தாயையும்கனம்பண்ணுவாயாக.” . (Ex. 20:12). 10.“பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக”; (Ex. 20:17).

                                      
💥பாலஸ்தின உடன்படிக்கை .(Deut. 30:1–9)

இஸ்ரவேலர்கள் கர்த்தரை மறந்து அந்நியதெய்வங்களை நமஸ்கரித்து வந்தபடியால் அவர்கள்மீது தேவகோபம் ஏற்பட்டது. அதன்காரணமாக வேறுதேசங்களுக்குள் சிதறடித்தார்.

அப்பொழுது, அவர்கள் தங்கள் இருதயத்திலே சிந்தனைசெய்து, தங்கள்  தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும்  கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால் உன் தேவனும் கர்த்தருமாகிய நான் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவேன்  உங்கள்  இருதயத்தையும் உங்கள் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணுங்கள்.அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும்படி உங்கள்  தேவனாகிய கர்த்தர்கிய நான் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...