என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் -2
உம்மைதான் நான் நம்பிருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
1
நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலை குனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க
2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க
3
உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்த கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஸ்வரியம் கனமுமே உம்மாலேதான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக