உள்ளம் நொறுங்கிய எந்தன்
கண்ணீர் கண்ட என் தேவன் (2)
தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்
தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)
நன்றி நன்றி சொல்வேன் தேவா
நன்றி நன்றி சொல்வேன் தேவா
உந்தன் அன்னைச் சொல்லிப் பாட
எந்தன் நாவு ஒன்று போதா (2)
2. தாயைப் போல் மனம் உருகி
எந்தன் இருதயம் வருடி (2)
ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்
மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2)
3. சிறுமை அடைந்தவன் என்னில்
மேன்மை அளித்த என் இயேசு (2)
வாழ்கின்றார் அவர் இன்றும் வாழ்கின்றார்
உயர்த்துவார் உன்னையும் உயர்த்துவார் (2)
4. சாத்தான் விரித்த வன் வலையில்
சேற்றில் விழுந்த அந்நிலையில் (2)
நொறுங்குண்டேன் உள்ளத்தில் நறுங்குண்டேன்
மருந்துண்டேன் இயேசுவின் விருந்துண்டேன் (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக