பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவ மைந்தன் இன்று பிறந்தார்
மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே
வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக