1. எழுப்புதல் காற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. - 2
2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே - 2
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே - 2
3. ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே - 2
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே - 2
4. மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே - 2
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே - 2
5. பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று
சத்ருக்கள் மேலாக வீசிடுதே - 2
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே - 2
Bridge:
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
சூழ்நிலை மாறிடுதே
ஆவியோடே நாம் துதித்திடும் நேரம்
தடைகள் உடைந்திடுதே
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
வல்லமை பெருகிடுதே
சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம்
தேசமே மாறிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
தேசத்தில் வீசட்டுமே - 3
வெள்ளி, 22 ஜனவரி, 2021
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே அவரில் அன்புகூரும் யாவருக்கும்
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே - 2
1) கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை (-2)
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர எழும்பிடுவேன்-(2) - அன்றியும்
2) கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார் (2)
என் இதயம் புது பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும் பாடிடுமே (2) - அன்றியும்
3) கர்த்தரையே சார்ந்திருப்போர்
பூரண சமாதானம் பெற்றிடுவார் (2)
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும் (2) - அன்றியும்
https://youtu.be/3xNPksYhL5U
புதன், 20 ஜனவரி, 2021
வேதாகம மொழி மாற்ற வரலாறு
வேதாகம மொழி மாற்ற வரலாறு
💫யூதர்கள் தங்களுடைய வேதத்தை கி.மு.285இல் கிரேக்க மொழிக்கு மொழியாக்கம் செய்தனர் இதற்க்கு செப்துவஜிந்த் என்று பெயர்.
💫கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ரோம் மொழி இலத்தீனிலும், எகிப்திய மொழி காப்டிகிலும், சிரியா மொழி சீரியாகிலும் பழைய ஏற்பாடு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
💫பல நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்க சபை பிரிவின் தலைமை, தங்கள் போதகர்கள் தவிர மற்றவர்கள் வேதத்தை வாசிப்பது தடை செய்திருந்தது. வேதத்தை கற்கவும் மொழி மாற்றம் செய்யவும் முற்பட்ட அநேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
💫விக்லிஃப் என்பவர் கி.பி.1380-ல் புதிய ஏற்பாட்டையும், 1382-ல் பழைய ஏற்பாட்டையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.
💫கி.பி.16ஆம் நூற்றாண்டில் டிண்டேல் என்பவர் வேதாகமத்தின் ஆங்கில மொழியாகத்தில் ஈடுபட்டு இரத்த சாட்சியாக மரித்தார். அவரது மொழியாக்கம் பிற்கால ஆங்கில வேதாகமத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதியை அவர் மொழியாக்கம் செய்தார்.
அவரது நண்பர் கவர்டேல் ஆங்கில வேதாகமத்தை கி.பி.1535-ல் வெளியிட்டார். இதன் பிறகு தான் பலரால் பயன்படுத்தபட்டு வரும் kjv வெளியிடப்பட்டது.
💫ஸ்காட்லாந்தின் ஆறாவது ஜேம்ஸ் அரசர் இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் அரசரானார். அவர் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதற்க்கான சிறந்த வல்லுனர்களை நியமித்து, கவனமாக பணி புரிய செய்தார். அதன் பயனாக கி.பி.1611-ல் king james Athorised Version வெளியிடப்பட்டது.
💫கி.பி.1466-ல் ஜோகான் மென்றல் என்பவர் வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார். இதுவே உலகின் அச்சிடப்பட்ட முதல் வேதாகமம் ஆகும்.
💫கி.பி.1521-ல் மார்டின் லூதர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் ழொழியில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து 1532-ல் பழைய ஏற்பாட்டையும் , 1534-ல் தள்ளுபடி ஆகமங்களையும் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார்.
🙏🙏🙏
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பயணங்கள் பலவகை 7th கட்டுரை
பயணங்கள் பலவகை DOWNLOAD
-
கோத்திரங்கள் 12 கானானுக்கு வேவு பார்க்க சென்றவர்கள்..... 1. ரூபன் -கோத்திரத்தில் சம்முவா 2. சிமியோன் -கோத்திரத்தில் சாப்பாத் 3. யூதா -கோ...
-
வேதாகம தீர்க்கதரிசிகள் வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...