வியாழன், 6 ஏப்ரல், 2023

உள்ளத்தில் இருந்து ஆராதனை உணர்வே உமக்கு ஆராதனை

உள்ளத்தில் இருந்து ஆராதனை 
உணர்வே உமக்கு ஆராதனை

ஆராதனை ஆராதனை 
உமக்கே உமக்கே ஆராதனை - 4

1. ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர் 
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் 
சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர் 
சேராபீன் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்

2. நீர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர் 
அண்டினோரை அன்பாய் என்றும் நேசிக்கின்றவர் 
உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ 
உம் அன்பை எண்ணி பாடாத மனிதருண்டோ

3. என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில் 
புதியதோர் ஆரம்பம் எனக்குத் தந்தவர் 
நான் நினையாத வழிகளில் கொண்டு வந்தவர் 
நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஸ்தோத்திர பலிகள் 1000

அன்பான சகோதர சகோதரிகளே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நம் தேவாதி தேவனை நீங்களும் துதித்து ஆசீர்வாதங்களை பெற்றுகொள்ளுங்களேன். 1. அப்பா பி...