கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே கன்மலை கோட்டையே
ஆபத்துக்காலத்தில் அனுகூலமே
எந்தன் தஞ்சம் நீரே
தலை உயர்த்திடுவீர் மேன்மை தந்திடுவீர்
ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவீர்
1. தீங்குநாளில் கூடாரத்தில்
மறைத்துக் காத்திடுவீர்
எத்தனை இடர்கள் என்னை சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர்
2.என் சத்துருக்கள் கண்கள் காண
என்னை உயர்த்திடுவீர்
எந்தன் தலையை எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
3.வெள்ளம் போல சத்துரு வந்தால்
எனக்காய் யுத்தம் செய்வீர்
சோதனையை ஜெயித்திட உந்தன்
பெலனை தந்திடுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக