என்ன நான் சொல்வேன்
ஈடாய் என்ன செய்வேன்
கிருபையே அல்லாமல்
வேறு என்ன சொல்வேன் 2
இயேசு என்னை கண்டாய்
தம்ஜீவனைத் தந்தார்
இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டார் 2
உண்மைய சொல்ல போனால்
கெட்டகுமாரன் நான்
அப்பாவின் ஸ்நேகம் என்னை மாற்றி விட்டதே
1.
வாழ்வும் முற்றும் மோசம்
எல்லாம் வெளி வேஷம்
முற்றிலுமாய் தோஷம் மாயிருந்தேனே
இயேசுவின் சுவிசேஷம்
உள்ளே வந்த நேரம்
பாவங்கள் அந்நேரம் மாறிவிட்டதே
2.
ஏமாற்ற வாழ்வு மாயையான தோற்றம்
பொய்யான வார்த்தைகள் பேசி அலைந்தேன்
கட்டி அனைத்தென்னை
உம் பிள்ளையாய் மாற்றும் மார்போடு அனைத்த உம் நேசம் பெரிதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக