வியாழன், 10 டிசம்பர், 2015

2 கொரிந்தியர் - மனந்திரும்புதலின் சந்தோஷம்

மனந்திரும்புதலின் சந்தோஷம் -

🌹 2 கொரிந்தியர் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “B' Epistole pros Korinthious” (Second Letter [Epistle] to the Corinthians) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 47-வது புத்தகமாக வருகிறது.

☀ பெரும்பாலும் கி.பி. 55-ன் கோடை காலத்தின் முடிவாக அல்லது இலையுதிர் காலத்தின் ஆரம்பமாக இருக்கலாம்.

☀ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபை பற்றி கேள்விப்பட்ட இன்னும் சில விஷயங்கள், அப்போஸ்தலன் பவுலுக்குக் கவலையை ஏற்படுத்தின.

☀ கொரிந்தியருக்கு அவர் தன் முதல் நிருபத்தை எழுதி சில மாதங்களே ஆகியிருந்தன.

☀ தீத்துவும் கொரிந்துவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்; யூதேயாவிலிருந்த பரிசுத்தவான்களுக்காக காணிக்கை சேகரிப்பதில் உதவுவதற்கும், அத்தோடு பவுலின் முதல் நிருபத்துக்கு கொரிந்தியர் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்பதை காண்பதற்கும் தீத்து அங்கு அனுப்பப்பட்டிருந்தார். (2 கொ. 8:1-6; 2:13)

☀ அக்கடிதம் அவர்களைத் துக்கப்படவும் மனந்திரும்பவும் வைத்ததை அறிந்ததில் பவுல் அடைந்த ஆறுதலுக்கு அளவே இல்லை!

☀ குறிப்பாக, 1 கொரி 5-இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம் மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார்.

☀ மக்கெதோனியாவிலிருந்த பவுலிடம் தீத்து இந்த நல்ல செய்தியை கொண்டு வந்திருந்தார். தன் பிரியத்திற்குரிய உடன் விசுவாசிகளான கொரிந்தியர்களுக்காக இப்போது அப்போஸ்தலனுடைய இருதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது. (7:5-7; 6:11).

☀ ஆகவே பவுல் மீண்டும் கொரிந்தியருக்கு கடிதம் எழுதினார்.

☀ இதயத்தைக் கனிவிக்கும், பயனுள்ள இந்த இரண்டாவது நிருபம் மக்கெதோனியாவில் எழுதப்பட்டு, தீத்துவால் கொண்டு செல்லப்பட்டது என்பது தெள்ளத் தெளிவானதே. (9:2, 4; 8:16-18, 22-24).

☀ கொரிந்தியருக்குள் ‘மகா பிரதான அப்போஸ்தலர்’ இருந்தனர்; இவர்களைக் “கள்ள போதகர்கள், கபடமுள்ள வேலையாட்கள்” என்றும் பவுல் விவரித்தார்.

☀ அவர்கள், கொரிந்துக்கு வரும் திட்டத்தை பவுல் மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர். நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர். அவர் தற்பெருமை மிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர்.

☀ இந்தக் கவலைக்குரிய விஷயமே இக்கடிதத்தை எழுதும்படி பவுலைத் தூண்டியது. (11:5, 13, 14).

☀ அனுபவமற்ற இந்தப் புதிய சபையின் ஆவிக்குரிய நலனிற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது; மேலும் அப்போஸ்தலனாக பவுலின் அதிகாரத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

☀ இவ்வாறு கொரிந்துவுக்கு எழுதின அவருடைய இரண்டாவது நிருபம் பெரும் தேவையைப் பூர்த்தி செய்தது.

☀ “மூன்றாந்தரமாக உங்களிடம் வர ஆயத்தமாயிருக்கிறேன்” என்று பவுல் சொன்னது கவனிக்க வேண்டியது. (2 கொ. 12:14)

☀ தன் முதல் நிருபத்தை அவர் எழுதினபோது, இரண்டாவது தடவை அவர்களைச் சென்று காண திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் செல்ல தயாராயிருந்தபோதிலும், ‘மகிழ்ச்சிக்குரிய இந்த இரண்டாவது சந்தர்ப்பம்’ கைகூடிவரவில்லை. (1 கொ. 16:5; 2 கொ. 1:15).

☀ ஆகவே, பவுல் ஒரு தடவை மாத்திரமே சென்றிருந்தார்; அதுவும் கி.பி. 50-52-க்கு இடைப்பட்ட காலத்தில் 18 மாதங்களை செலவழித்திருந்தார்.

☀ அப்போதுதான் கொரிந்துவிலுள்ள அந்தக் கிறிஸ்தவ சபையும் ஸ்தாபிக்கப்பட்டது. (அப். 18:1-18)

☀ எனினும், மீண்டும் கொரிந்துவுக்குச் செல்ல வேண்டுமென்ற பவுலின் விருப்பம் பின்னர் நிறைவேறியது. பெரும்பாலும் கி.பி. 56-ல் கிரீஸில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது, அந்தக் காலப்பகுதியில் பாதியை கொரிந்துவில் செலவழித்தார். அங்கிருக்கையில்தான் அவர் ரோமருக்குத் தன் நிருபத்தை எழுதினார். (ரோ. 16:1, 23; 1 கொ. 1:15).

☀ மொத்தம் 13 அதிகாரங்களும், 257 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 11-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 13-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ கொரிந்திய சபைக்குள் நம்மால் மீண்டும் ஒருமுறை நோட்டம்விட முடிகிறது.

☀ அவர்களுக்கும் நமக்கும் அறிவுரை கூறும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து பயனடையவும் நம்மால் முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD