<நற்செய்தியின் ஆரம்பம்>
👉👉👉 மத்தேயு 👈👈👈
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
💐 மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Matthaion Euangelion (The Gospel according to Matthew) என்று அழைக்கப்படுகின்றது.
💐 நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 40-வது புத்தகமாக வருகிறது, புதிய ஏற்பாட்டில் 1-வது புத்தகமாக வருகிறது.
💐 கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முதலில் எழுத்தில் வடித்தவர் மத்தேயு.
💐 இவரது பெயர், “மத்தித்தியா” என்ற எபிரெய வடிவின் சுருக்கமாக இருக்கலாம்.
💐 அதற்கு, “யாவேயின் கொடை” என்று அர்த்தம்.
💐 இயேசு தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலரில் இவரும் ஒருவர்.
💐 இயேசுவின் சீஷராவதற்கு முன்பாக, மத்தேயு வரி வசூலிப்பவராக இருந்தார். இந்த வேலையை யூதர்கள் முற்றிலுமாக வெறுத்தனர்; ஏனெனில் அது, அவர்கள் சுயாதீனர் அல்ல, ரோமப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழிருப்போர் என்பதை இடைவிடாது நினைப்பூட்டியது.
💐 மத்தேயுவின் மற்றொரு பெயர் லேவி.
💐 இவருடைய தகப்பனின் பெயர் அல்பேயு.
💐 தம்மைப் பின்பற்றும்படி இயேசு அவரை அழைத்த போது உடனடியாக பின்சென்றார்.
💐 “சுவிசேஷம்” என்ற இந்தச் சொல்லுக்கு அர்த்தம் “நற்செய்தி” என்பதாகும்.
💐 முதல் மூன்று சுவிசேஷங்களைப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘சினாப்டிக் (Synoptic)’ என அழைக்கின்றனர்; இதற்கு “ஒரேவிதமான கருத்து” என்று அர்த்தம்.
💐 “ராஜ்யம்” என்ற வார்த்தையை அடிக்கடி (50-க்கும் மேற்பட்ட தடவை) பயன்படுத்தியிருப்பதால், இந்த சுவிசேஷத்தை ராஜ்ய சுவிசேஷம் என அழைக்கலாம்.
💐 பரலோக ராஜ்யத்தைப் பற்றிய ஏழு உவமைகள் (13:1-58).
👉 1).விதைக்கிறவனின் உவமை
👉 2).வயலிலுள்ள களைகள்
👉 3).கடுகு விதை
👉 4).புளித்தமாவு
👉 5).புதைந்திருந்த பொக்கிஷம்
👉 6).விலையுயர்ந்த முத்து
👉 7).வலை.
💐 முதல் 18 அதிகாரங்களில், ராஜ்யம் என்ற தலைப்பை வலியுறுத்தியதால் மத்தேயுவால் காலவரிசையை பின்பற்ற முடியவில்லை. எனினும், கடைசி பத்து அதிகாரங்கள் (19-லிருந்து 28 வரை) காலவரிசைப்படி உள்ளன, ராஜ்யத்தைப் பற்றியும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றன.
💐 இப்புத்தகத்தில் குறைந்தபட்சம் பத்து உவமைகள் உள்ளன:-
🎄 01.வயலில் களைகள் (13:24-30)
🎄 02.புதைந்திருந்த பொக்கிஷம் (13:44)
🎄 03.விலையுயர்ந்த முத்து (13:45, 46)
🎄 04.வலை (13:47-50)
🎄 05.இரக்கமற்ற அடிமை (18:23-35)
🎄 06.வேலையாட்களும், வீட்டெஜமானும் (20:1-16)
🎄 07.தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் (21:28-32)
🎄 08.ராஜாவின் குமாரனுடைய கலியாணம் (22:1-14)
🎄 09.பத்துக் கன்னிகைகள் (25:1-13)
🎄 10.தாலந்துகள் (25:14-30).
💐 மத் 1:23-இல் இயேசு இம்மானுவேல் என்று அடையாளம் காட்டப்படுகிறார். இந்த எபிரேயச் சொல்லுக்குக் ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்‘ என்பது பொருள்.
💐 மொத்தம் 28 அதிகாரங்களும், 1071 வசனங்களையும் கொண்டுள்ளது.
💐 26-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிறிய அதிகாரமாகவும் உள்ளது.
💐 இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதை நிரூபிக்க தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் மீது மத்தேயு கவனத்தைத் திருப்புகிறார்.
🐐 மத் 1:23 — ஏசா 7:14
🐐 மத் 2:1-6 — மீகா 5:2
🐐 மத் 2:13-18 — ஓசி 11:1
எரே 31:15
🐐 மத் 2:23 — ஏசா 11:1. இயேசு இராஜாவுக்கே துதியும், கனமும் உண்டாவதாக ஆமென்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக