கண்டிப்பு நிறைந்த நிருபம்
🌹 கலாத்தியர் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Galates” (Letter [Epistle] to the Galatians) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 48-வது புத்தகமாக வருகிறது.
☀ கலாத்திய சபைகளுக்கு என குறிப்பிட்டு கலாத்தியர் 1:2-ல் பவுல் எழுதுகையில் அவை, பிசீதியா நாட்டு அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை ஆகியவற்றை உட்படுத்துவது தெரிகிறது.
☀ இச்சபைகள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தாலும் எல்லாம் ரோம மாகாணத்துக்குள் இருந்தன.
☀ இந்தப் பிரதேசத்தின் வழியாக பவுலும் பர்னபாவும் மேற்கொண்ட முதல் மிஷனரி பயணத்தைப் பற்றி அப்போஸ்தலர் 13-ம் 14-ம் அதிகாரங்கள் குறிப்பிடுகின்றன; இதுவே கலாத்திய சபைகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிநடத்தியது.
☀ இச்சபைகளில் யூதரும் யூதரல்லாதவர்களும் இருந்தனர்.
☀ கெல்ட்டிய இனத்தவர்கள் அல்லது கால் நாட்டினரும் அங்கிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஏறக்குறைய கி.பி. 46-ல் பவுல் எருசலேமுக்குச் சென்று சிறிது காலத்துக்குப் பின்பாகும். (அப். 12:25).
☀ கி.பி. 49-ல், பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தை சீலாவோடு சேர்ந்து கலாத்திய பிராந்தியத்தில் தொடங்கினார்.
☀ இது ‘சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகுவதில்’ விளைவடைந்தது. (அப். 16:5; 15:40,41; 16:1,2) எனினும், விரைவிலேயே கள்ளப் போதகர்களாகிய யூத மதவாதிகள் வந்தனர். விருத்தசேதனம் செய்வதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதும் உண்மை கிறிஸ்தவத்திற்கு முக்கியமானது என கலாத்திய சபைகளிலிருந்த சிலரை நம்ப வைத்தனர்.
☀ இதற்கிடையில் பவுல் தன் பயணத்தில், மீசியா, மக்கெதோனியா, கிரீஸ் ஆகியவற்றைக் கடந்து, முடிவில் கொரிந்துவை வந்தடைந்தார். அங்கே சகோதரர்களுடன் 18 மாதங்களுக்கும் மேல் தங்கினார். பின்பு, கி.பி. 52-ல், எபேசு வழியாக, தான் புறப்பட்ட இடமாகிய சீரியாவின் அந்தியோகியாவுக்கு அதே ஆண்டிலேயே திரும்பினார். (அப். 16:8,11,12; 17:15; 18:1,11, 18-22).
☀ யூத மதவாதிகளின் நடவடிக்கையைப் பற்றிய செய்தி அவருடைய காதை எட்டிய உடனேயே இதை அவர் எழுதினார் என்பதில் சந்தேகமில்லை. இது கொரிந்து, எபேசு, அல்லது சீரியாவின் அந்தியோகியாவாக இருக்கலாம்.
☀ கி.பி. 50-52-ல், அவர் 18 மாத காலம் கொரிந்துவில் தங்கியபோது இருக்கலாம். ஏனெனில், கலாத்தியாவிலிருந்து தகவல் அங்கு வந்தெட்ட அவ்வளவு காலம் தேவைப்பட்டது.
☀ எபேசுவில் எழுதியிருக்க முடியாது, ஏனெனில் திரும்பி வருகையில் கொஞ்ச நாட்களே அங்கே தங்கினார்.
☀ எனினும், தான் புறப்பட்ட இடமாகிய சீரியாவின் அந்தியோகியாவில் “சிலகாலம் தங்கி”னார்; பெரும்பாலும் கி.பி. 52-ன் கோடை காலமாக அது இருக்கலாம்.
☀ இந்த நகரத்துக்கும் ஆசியா மைனருக்கும் இடையே சிறந்த போக்குவரத்து வசதியிருந்தது. அதனால், யூத மதவாதிகளைப் பற்றிய அறிக்கையை அவர் அங்கு பெற்றிருக்கலாம்.
☀ இந்தச் சமயத்தில் சீரியாவின் அந்தியோகியாவிலிருந்து கலாத்தியருக்குத் தன் நிருபத்தை எழுதியிருக்கலாம். (அப். 18:23).
☀ கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு” பவுல் எழுதின நிருபம் உறுதியும் கண்டிப்பும் மிக்கது.
☀ பவுல் தன்னை உண்மையான அப்போஸ்தலன் என்றும் (இந்த உண்மைக்குப் புறம்பாக அவருக்கு அவப்பெயர் சூட்ட யூத மதவாதிகள் நாடினர்) நியாயப்பிரமாணத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமே நீதியுள்ளோராகத் தீர்க்கப்படுவர் என்றும், அதனால் விருத்தசேதனம் கிறிஸ்தவர்களுக்கு அவசியமில்லை என்றும் அதில் நிரூபிக்கிறார்.
☀ வழக்கமாக தன் நிருபங்களை எழுதுவதற்கு ஒரு காரியதரிசியை உபயோகிக்கும் பவுல், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தை ‘பெரிய எழுத்துக்களால் தன் கையாலேயே’ எழுதினார். (6:11)
☀ இந்தப் புத்தகத்திலிருந்த விஷயங்கள், பவுலுக்கும் கலாத்தியருக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இயேசு கிறிஸ்துவின் மூலம் மெய்யான கிறிஸ்தவர்கள் பெற்ற சுயாதீனத்திற்கான மதித்துணர்வை இப்புத்தகம் வலியுறுத்துகிறது.
☀ கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் தம் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றைத் தருகிறார்.
☀ வழக்கமாக, பவுல் எழுதிய நிருபங்களில் முதலில் கடிதத்தை எழுதுபவர் யார், அதைப் பெறுபவர் யார் என்னும் குறிப்புக்குப் பிறகு, வாழ்த்தும், நன்றியுரையும், கடவுளுக்குப் புகழுரையும் அமைந்திருக்கும். ஆனால் கலாத்தியருக்கு எழுதிய மடலில் பவுல் சுருக்கமாக வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, உடனடியாகக் கலாத்தியரிடம் குற்றம் காணுகின்றார். உணர்ச்சிவசப்பட்டவராக அவர்களைக் கடிந்துகொள்கின்றார். அவர்களைப் பார்த்து, “புத்தியில்லாத கலாத்தியரே” என்று வசைமொழி கூறுகின்றார் (கலா 3:1).
☀ மொத்தம் 6 அதிகாரங்களும், 149 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 4-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 6-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ கடிதத்தின் இறுதியில் வாழ்த்துரை கூறுவது வழக்கம். ஆனால் இங்கோ பவுல் “இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” என்று கூறி, கடிதத்தை முடித்துவிடுகிறார் (கலா 6:17).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக