செவ்வாய், 15 டிசம்பர், 2015

2தெசலோனிக்கேயர் - தெளிவை ஏற்படுத்தியது

தெளிவை ஏற்படுத்தவென

🌹 2தெசலோனிக்கேயர்

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Thessalonikeis B” (Second Letter [Epistle] to the Thessalonians) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 53-வது புத்தகமாக வருகிறது.

☀ அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதத்தை எழுதினார்; முதல் நிருபம் எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளேயே இரண்டாம் நிருபமும் எழுதப்பட்டது.

☀ இதுவும் கொரிந்துவிலிருந்தே எழுதப்பட்டதென்றும் அறிந்திருக்கிறோம்.

☀ இந்தக் கடிதத்திலும் சில்வானும்(சீலா) தீமோத்தேயும் பவுலுடன் சேர்ந்து தெசலோனிக்கேயிலிருந்த சபைக்கு வாழ்த்துதல் சொல்கின்றனர்.

☀ அவர்கள் ஆரம்ப சபையின் பயண ஊழியர்களாக இருந்தனர். இச்சமயம் மூவரும் கொரிந்துவில் ஒன்றாக கூடியிருந்தனர். அதன்பின் மறுபடியும் அதுபோல் ஒன்றுகூடினார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. (2 தெ. 1:1; அப். 18:5,18)

☀ பவுல் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயத்தையும் அதை அவர் கலந்தாராய்ந்த விதத்தையும் கவனிக்கும்போது அதில் அவசரத்தன்மை புலப்படுகிறது. அந்த சபையை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியம் அதில் வெளிப்படுகிறது.

☀ சிலர் கர்த்தரின் வருகை சீக்கிரத்தில் நிகழப் போகிறது என்று அடித்துக்கூறினர். இத்தகைய கற்பனை கதையைக் கட்டிவிட்டதோடு மட்டுமின்றி மற்றவர்களிடமும் இதைக் கூறி சபையில் அவர்கள் ஏற்படுத்திய கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. சிலர் வேலைசெய்யாமல் இருப்பதற்கு இதை ஒரு சாக்காக பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது. (2 தெ. 3:11)

☀ தன்னுடைய முதல் நிருபத்தில் கர்த்தரின் வருகைப் பற்றிய குறிப்புகளை பவுல் எழுதியிருந்தார்.

☀ முதல் தெசலோனிக்கேயர் நிருபத்தில் ஆறுமுறை கிறிஸ்துவின் வருகை பற்றிப் பேசப்பட்டிருந்தது. அது விரைவில் நிகழும் என அந்நிருபத்தில் சொல்லப்பட்டிருந்தது.

☀ அந்தக் கடிதம் வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது இவர்கள் பவுலின் வார்த்தைகளைப் புரட்டி, தாங்களாகவே சில அர்த்தங்களை கொடுத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

☀ பவுலிடமிருந்து வந்ததாக தவறாக சொல்லப்பட்ட கடிதத்தில் ‘கர்த்தருடைய நாள் வந்துவிட்டது’ என குறிப்பிட்டிருப்பதாகவும் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது.

☀ சபையில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி பவுலுக்குக் கிடைத்திருக்க வேண்டும். அவருடைய முதல் நிருபத்தை அந்தச் சபைக்கு எடுத்து சென்றவர் இந்தத் தகவலை சொல்லியிருக்கலாம்.

☀ ஆகையால் அவர் பாசம் வைத்திருந்த சகோதரர்களின் எண்ணத்தை திருத்த மிக ஆவலாய் இருந்திருப்பார்.

☀ எனவே, கி.பி. 51-ம் ஆண்டில் பவுல் கொரிந்துவிலிருந்தபோது ஒரு நிருபத்தைத் தெசலோனிக்கேயிலிருந்த சபைக்கு அனுப்பினார்; அப்போது அவருடைய இரண்டு தோழர்களும் அங்கேதான் இருந்தனர்.

☀ கிறிஸ்துவின் வருகைப் பற்றிய தவறான எண்ணத்தை திருத்தி, சத்தியத்தில் உறுதியாய் நிலைநிற்க வேண்டும் என்ற அன்பான ஊக்கமூட்டுதலை பவுல் கொடுக்கிறார்.

☀ தெசலோனிக்கேயிலிருந்த சகோதரரின் ஆவிக்குரிய நலத்துக்கும், சபையின் ஐக்கியத்துக்கும் செழுமைக்கும் ஆழ்ந்த அக்கறையை இந்த நிருபத்தில் பவுல் வெளிப்படுத்தினார்.

☀ “அக்கிரம மனுஷன்” முதலில் வெளிப்பட்டு, “கர்த்தருடைய ஆலயத்தில் உட்கார்ந்து தன்னையே கடவுளென்று காண்பி”ப்பதும் நிறைவேற வேண்டுமென்பதை எடுத்துக் காண்பித்தார்.

☀ கர்த்தருடைய நாள் வரும் காலத்தைப் பற்றி அவர்களுக்கிருந்த கருத்தை சரிசெய்தார்.

☀ எனினும், உரிய காலத்தில் கர்த்தராகிய இயேசு, ‘தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், . . . விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும்’ ஜுவாலித்து எரிகிற அக்கினியில் பழிவாங்குபவராக வானத்திலிருந்து வெளிப்படுவார். ஆகவே, ‘தேவனுடைய ராஜ்யத்துக்குப் பாத்திரராக எண்ணப்படுவோர்’ இது நிறைவேறும் என்பதில் முழு நிச்சயத்துடன் இருக்கலாம். (2:3,4)

☀ மொத்தம் 3 அதிகாரங்களும், 47 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 3-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ இப்போது இது செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் காணப்படவில்லை; ஆனால், ஒன்று தெசலோனிக்கேயருக்குப் பின் காணாமற்போயிருக்கும் ஏழு தாள்களில் முதல் இரண்டில் நிச்சயமாக இது இருந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD