மன உறுதியுடன் இருத்தல்
🌹2 தீமோத்தேயு 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Timotheon B” (Second Letter [Epistle] to Timothy) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 55-வது புத்தகமாக வருகிறது.
☀ பவுல் மறுபடியும் ரோமில் கைதியாக இருந்தார். எனினும், இந்த இரண்டாவது சிறையிருப்பின் சூழ்நிலைமைகள் முதலில் இருந்ததைப் பார்க்கிலும் கடுமையாக இருந்தன.
☀ இது கி.பி. 65 ஆக இருக்கலாம். கி.பி. 64 ஜூலையில் ரோம் நகரமே தீப்பற்றி எரிந்து பெரிய நாசத்தை ஏற்படுத்தியது.
☀ ரோம் நகரத்தின் 14 பிராந்தியங்களில் 10-ல் மிகுதியான சேதம் ஏற்பட்டிருந்தது.
☀ ரோம் பேரரசன் நீரோவின், “கட்டளையால்தான் அந்தப் பெருந் தீ ஏற்பட்டது என்று பரவியிருந்த கெட்ட எண்ணத்தை அகற்ற முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு, பொது ஜனங்களால் அப்போது அருவருப்பாக கருதப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது குற்றப்பழியை நீரோ சுமத்தி கடுமையாக சித்திரவதை செய்தான்.
☀ நகரத்துக்குத் தீ வைத்த குற்றவாளிகளாக மட்டுமல்ல மனிதகுலத்தையே வெறுக்கும் ஆட்கள் என்பதாகவும் அநேகர் தீர்ப்பளிக்கப்பட்டனர்.
☀ அவர்களுடைய மரண தண்டனையின்போது எல்லா வகையிலும் ஏளனம் செய்யப்பட்டனர். மிருகங்களின் தோல்கள் போர்த்தப்பட்டு, நாய்களால் கடித்திழுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலுவைகளில் அறையப்பட்டனர், அல்லது தீயில் எரிக்கப்பட்டனர். இரவில் வெளிச்சத்திற்காக எரிக்கப்பட்டனர்.
☀ இந்தக் கொடுமைகளை நிறைவேற்ற நீரோ தன்னுடைய தோட்டங்களை கொடுத்தான். ஓர் இரக்க உணர்ச்சி எழும்பிற்று.
☀ பொது ஜனங்களின் நன்மைக்காக அல்ல ஒரு மனிதனின் கொடூரத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர்” என்று ரோம சரித்திராசிரியனாகிய டாஸிட்டஸ் குறிப்பிடுகிறார்.”
☀ ரோமில் வன்முறையான இந்த துன்புறுத்துதல் நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான் பவுல் இரண்டாவது முறை கைதியாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சமயம் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். விடுதலை செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, முடிவான தீர்ப்புக்காகவும் மரண தண்டனைக்காகவும் காத்திருந்தார்.
☀ மிகச் சிலரே பார்க்க வந்தனர். ஒருவன் தன்னை கிறிஸ்தவனாக வெளிப்படையாய் காட்டிக்கொண்டால் அப்போதே கைதுசெய்யப்பட்டு வதைத்துக் கொல்லப்படும் வாய்ப்பு இருந்தது. இதனால்தான், எபேசுவிலிருந்து பார்க்க வந்தவரைக் குறித்து நன்றியுணர்வோடு பவுல் எழுதினார்: “ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.” (2 தீ. 1:16,17)
☀ மரணம் நெருங்கும் நிலைமையிலும் ‘கிறிஸ்து இயேசுவுக்குள்ளிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்கிசையக் கடவுளின் சித்தத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்’ என்று தன்னை குறிப்பிடுகிறார். (1:1)
☀ கிறிஸ்துவோடு வாழ்வதற்கான வாய்ப்பு தனக்கு காத்திருப்பதை பவுல் அறிந்திருந்தார்.
☀ அக்காலத்தில் அறியப்பட்ட உலகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும், எருசலேமிலிருந்து ரோம் வரையாகவும், ஒருவேளை ஸ்பானியா வரையாகவுங்கூட அவர் பிரசங்கித்தார். (ரோ. 15:24,28)
☀ இறுதி வரை பவுல் உண்மையுடன் தன் ஓட்டத்தை ஓடி முடித்தார். (2 தீ. 4:6-8).
☀ பவுல் இரத்த சாட்சியாய் மரிப்பதற்கு சற்றுமுன்பு, சுமார் கி.பி. 65-ல் இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கலாம்.
☀ தீமோத்தேயு இன்னும் எபேசுவில்தான் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அங்கிருக்கும்படி பவுல் அவரை ஊக்கப்படுத்தியிருந்தார். (1 தீ. 1:4)
☀ சீக்கிரமாய் வரும்படி பவுல் தீமோத்தேயுவை இருமுறை அவசரப்படுத்துகிறார்; அவரோடு மாற்குவை அழைத்துவரும்படியும், துரோவாவில் தான் விட்டுவந்திருந்த மேலங்கியையும் புத்தக சுருள்களையும் கொண்டுவரும்படியும் கேட்கிறார். (2 தீ. 4:9,11,13,21)
☀ மிகவும் நெருக்கடியான சமயத்தில் எழுதப்பட்ட இந்த நிருபம் தீமோத்தேயுவை மிகச் சிறந்த முறையில் உற்சாகப்படுத்தியது. அது முதற்கொண்டு வாழ்ந்த எல்லா உண்மையான விசுவாசிகளுக்கும் பயனுள்ள உற்சாகத்தை தொடர்ந்து அளித்துவந்திருக்கிறது.
☀ தீமோத்தேயு சீக்கிரமாய் வரும்படி பவுல் குறிப்பிட்டு பயணத்தைக் குறித்த விவரங்களைக் கொடுக்கிறார்.
☀ பவுல் முதன் முறை வழக்காடியபோது எல்லாரும் அவரைக் கைவிட்டனர். ஆனால், புறஜாதிகளிடம் பிரசங்கிப்பு முழுமையாக நிறைவேறுவதற்காக கர்த்தர் அவருக்கு பெலனை அளித்தார். ஆகையால் கர்த்தர் தன்னை எல்லா தீமையினின்றும் விடுவித்து தம்முடைய பரலோக ராஜ்யத்துக்காக காப்பாற்றுவார் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
☀ மொத்தம் 4 அதிகாரங்களும், 83 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ தீமோத்தேயு ‘சிசுப் பருவத்திலிருந்து’ கடவுளின் வார்த்தைகளை அறிந்திருந்தார்; ஏனெனில் லோவிசாளும் ஐனிக்கேயாளும் அன்புடன் அவருக்கு சொல்லிக்கொடுத்தனர் என்று பவுல் குறிப்பிட்டார்.
☀ ‘சிசுப் பருவம்’ என்று குறிப்பிட்டதிலிருந்து, பிள்ளைகள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போதே வேதாகம போதனையை ஆரம்பிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறோம்.
☀ பிள்ளைகள் வளர்ந்தபின் நெருப்பைப் போன்ற ஆரம்பகால வைராக்கியம் குறைந்துவிட்டால் என்ன செய்வது? மாயமற்ற விசுவாசத்துடன் ‘பலத்தோடும் அன்போடும் தெளிந்த புத்தியோடும்’ அந்தத் தணலை மறுபடியுமாக அனல்மூட்டி எழுப்ப வேண்டுமென்பதே பவுலின் அறிவுரை.
☀ “கடைசி காலத்தில்,” கொடிய காலங்கள் வரும்; துன்மார்க்கமும் கல்லப் போதகங்களும் இருக்கும் என பவுல் சொன்னார். ஆகவே, ‘எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளோராக இருந்து தங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றும்’ பொறுப்பு குறிப்பாக இளைஞர்களுக்கும், ஏன் அனைவருக்குமே இருக்கிறது. (3:15, 1:5-7; 3:1-5; 4:5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக