வியாழன், 24 டிசம்பர், 2015

பிலேமோன் - பரிந்துரைக் கடிதம்

பரிந்துரைக் கடிதம் -

   🌹 பிலேமோன்🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Philemona” (Letter [Epistle] to Philemon) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 57-வது புத்தகமாக வருகிறது.

☀ பிலேமோன் என்றால் “அன்புள்ளவன்” என்று அர்த்தமாகும்.

☀ பிலேமோன் நிருபத்தின் எழுத்தாளர் பவுல் என்பது முதல் வசனத்தில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

☀ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மியூராட்டோரியன் சுருள்களின் பாகங்களில், பவுலின் மற்ற நிருபங்களோடு இந்த நிருபமும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

☀ பவுல் ஏறக்குறைய கி.பி. 60-61-ல் இதை எழுதியிருக்கலாம். ஏனெனில் ரோமர்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவர் அதிக காலம் பிரசங்கித்திருக்க வேண்டும்.

☀ மேலும், விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையை 22-ம் வசனத்தில் அவர் குறிப்பிடுகிறார். அதனால், இந்த நிருபம் சிறிது கால சிறையிருப்பிற்குப் பின்பு எழுதப்பட்டதென்ற முடிவுக்கு நாம் வரலாம்.

☀ பிலேமோனுக்கும், எபேசுவிலும் கொலோசெயிலும் இருந்த சபைகளுக்கும் எழுதப்பட்ட இந்த மூன்று நிருபங்களும் தீகிக்கு மற்றும் ஒநேசிமுவிடம் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கலாம். (எபே. 6:21,22; கொலோ. 4:7-9).

☀ பவுல் எழுதிய மிகச் சாதுரியமான, அன்பு ததும்பும் இந்த நிருபம் இன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

☀ இது ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய’ பவுலால் எழுதப்பட்ட மிகச் சிறிய நிருபம். முழு வேதாகமத்திலும், இதைவிட குறைந்த தகவல் யோவானின் இரண்டாம் மூன்றாம் நிருபங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

☀ பிலேமோன் நிருபம் மட்டுமே ‘தனிப்பட்ட ஒரு நபருக்கு’ பவுல் எழுதிய ஒரே கடிதம்.

☀ ஏனெனில், இது ஒரு சபைக்கோ பொறுப்புள்ள மேய்ப்பனுக்கோ முறைப்படி எழுதப்படவில்லை, ஒரு தனிப்பட்ட நபருக்கே எழுதப்பட்டது. அவருடைய பெயர் பிலேமோன்.

☀ பிலேமோன், ஆசியா மைனரின் மத்தியில் பிரிகியா பகுதியில் கொலோசெ பட்டணத்தில் பணக்காரராக வாழ்ந்திருக்க வேண்டும்.

☀ இந்த பிலேமோன் கிறிஸ்தவ சகோதரனோடு பவுல் கலந்துபேச விரும்பிய ஒரு தனிப்பட்ட பிரச்சினை மாத்திரமே இந்தக் கடிதத்தில் கையாளப்பட்டது. (ரோ. 11:13).

☀ பவுல் ரோமில் முதல் சிறையிருப்பின்போது (கி.பி. 59-61) கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க பவுலுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அப்போதுதான் அவர் ஒநேசிமுவோடு கலந்துரையாடியிருக்க வேண்டும்.

☀ பவுலின் நண்பராகிய பிலேமோனின் வீட்டில் அடிமையாக இருந்த ஒநேசிமு ஓடிவந்துவிட்டார். பவுலின் பிரசங்கத்துக்குச் செவிசாய்த்தவர்களுக்குள் ஒநேசிமுவும் ஒருவர். இதனால் ஒநேசிமு கிறிஸ்தவரானார்.

☀ ஒநேசிமுவின் சம்மதத்துடன் பவுல் அவரைப் பிலேமோனிடம் திரும்ப அனுப்பத் தீர்மானித்தார்.

☀ இதே சமயத்தில், எபேசுவிலும் கொலோசெயிலும் இருந்த சபைகளுக்குப் பவுல் நிருபங்களை எழுதியிருந்தார். கிறிஸ்தவ அடிமைகளும் அடிமைகளின் எஜமானர்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை இந்த இரண்டு நிருபங்களிலும் அளித்தார். (எபே. 6:5-9; கொலோ. 3:22–4:1)

☀ இதற்கும் மேலாக பிலேமோனுக்கும் பவுல் ஒரு நிருபத்தை எழுதினார்; இதில் ஒநேசிமுவுக்காக தனிப்பட்ட முறையில் மன்றாடினார். இது அவரே எழுதிய நிருபம்; பவுல் சாதாரணமாக அவ்வாறு எழுதுவதில்லை. (பிலே. 19) அவரே கைப்பட எழுதியதால், அவருடைய மன்றாட்டின் முக்கியத்துவம் இன்னும் சிறப்பித்துக் காட்டப்பட்டது.

☀ பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்த அன்பையும் ஒற்றுமையையும் காண முடிகிறது. பூர்வ கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் ‘சகோதரன்’ மற்றும் “சகோதரி” என்றழைத்தனர் என்று நாம் அறிந்துகொள்கிறோம். (பிலே. 1:2,20)

☀ ஒரேயொரு அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ள இப்புத்தகத்தில் 25 வசனங்கள் உள்ளது.

☀ சந்தேகமில்லாமல் தன் வேண்டுகோளுக்குப் பிலேமோன் இணங்குவார் என்று பவுல் எதிர்பார்த்தார். பிலேமோன் அவ்வாறு செய்வது மத்தேயு 6:14-ல் இயேசு சொன்னதையும், எபேசியர் 4:32-ல் பவுல் சொன்னதையும் நடைமுறையில் பொருத்துவதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD