அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து என வகைப்படுத்தலாம்.
மாத்திரை
ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும்.
ஒரு மாத்திரை என்பது ஒரு முறை கண் இமைக்கவோ ஒரு முறை கை நொடிக்கோ ஆகும் கால அளவு.
மெய்யெழுத்துகள் 1/2 மாத்திரை
குறில் எழுத்துகளுக்கு 1மாத்திரை
நெடில் எழுத்துகளுக்கு 2 மாத்திரை
உயிர் எழுத்து:
உயிர் எழுத்து -12 அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ.
உயிர் எழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து.
உயிர் எழுத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் குறில் / நெடில்
குறில் - அ இ உ எ ஒ. என 5
நெடில் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என 7
குறில் எழுத்துகள் என்றால் என்ன?
குறுகிய ஓசை உடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் ஆகும்.
நெடில் எழுத்துகள் என்றால் என்ன?
நீண்ட ஓசை உடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகும்.
மெய் எழுத்துகள்:
மெய்யெழுத்துகள் - 18 அவை க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
மெய்யெழுத்துகளை அவை ஒலிக்கும் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம்.
வல்லினம் ( மார்பு ) க ச ட த ப ற.
மெல்லினம் ( மூக்கு ) ங ஞ ண ந ம ன.
இடையினம் ( கழுத்து ) ய ர ல வ ழ ள.
வல்லினம்
வன்மையாக ஒலிப்பதால் வல்லினம் என அழைக்கப்படுகிறது.
மெல்லினம்
மென்மையாக ஒலிப்பதால் இது மெல்லினம் என அழைக்கப்படுகிறது.
இடையினம் வன்மையாகவும் மென்மையாகவும் இல்லாமல் இடையில் ஒலிப்பதால் இது இடையினம் என அழைக்கப்படுகிறது.
முதலெழுத்துகள்
உயிர் எழுத்துகள் 12 + மெய்யெழுத்துகள் 18 ஆக மொத்தம் 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் உயிர் மெய் எழுத்துகள் உருவாக இதுவே காரணமாக அமைகிறது.
ஆயுத எழுத்து
ஆயுத எழுத்து ........... இது தலையில் இருந்து பிறக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக