நான் விரும்பும் தலைவர் - காமராசர்
முன்னுரை:
தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்
பெருந்தலைவர் காமராசர். பல தலைவர்களை உருவாக்கியதால்
பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராசரை அறிவது மாணவர்
கடமைகளுள் ஒன்றாகும்.
இளமை காலம்:
காமராசர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், குடும்பச் சூழ்நிலை காரணமாக
தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை.
இருப்பினும், நாட்டுப்பற்றும் பொதுச்சேவை எண்ணமும் அவரிடம் வளர்ந்தன.
கல்விப் பணி:
1.மூடியிருந்த 6000 தொடக்கப் பள்ளிகளை உடனடியாக திறக்க செய்தார்,
2. இலவச கட்டாய கல்வி உருவாக்கி கொடுத்தார்,
3. மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்,
4. சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
மாணவர்கள் உயர்கல்வி பெற
1.பொறியியல் கல்லூரிகள்
2. மருத்துவக் கல்லூரிகள்
3.கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
4. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கினார்
முடிவுரை:
காமராசர், பதவியை விட மக்கள் சேவையை உயர்வாகக் கருதிய தலைவர்.
தனது 12-ம் வயது முதல் 02:10:1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார்.
தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரை போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக